இஸ்ரேல் – பலஸ்தீன் மோதல் : பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தல்

மத்திய கிழக்கு பகுதியில் உள்ள இலங்கையர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மத்திய கிழக்கில் நிலவும் மோதல் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்குமாறு இலங்கை வெளிவிவாகார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

ஏதேனும் அவசர நிலை ஏற்படுமாயின் Tel Aviv (இஸ்ரேல்) மற்றும் Ramallah (பலஸ்தீன்) ஆகிய இடங்களில் உள்ள இலங்கைத் தூதரகங்களுடன் தொடர்ந்தும் தொடர்பில் இருக்குமாறும் வெளிவிவாகார அமைச்சு இலங்கையர்களை வலியுறுத்தியுள்ளது.

இந்த நிலையில், மத்திய கிழக்கில் தற்போது நிலவும் மோதல் நிலைமை தொடர்பில் இலங்கை பிரஜைகள் எந்தவொரு உதவியினையும் பெறுவதற்கு வெளிவிவகார அமைச்சு இரண்டு அவசர தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

கொழும்பில் உள்ள வெளிவிவகார அமைச்சின் தூதரக விவகாரப் பிரிவினால் இவ்வாறு அவசர தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இதன்படி, மத்திய கிழக்கில் உள்ள இலங்கையர்கள் 0094711 757 536 அல்லது 0094711 466 585 எனும் அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தொடர்பு கொள்வதன் மூலம் எந்தவொரு உதவிகளையும் பெற்றுக்கொள்ள முடியுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், வெளிவிவகார அமைச்சின் தூதரக விவகாரப் பிரிவை வழக்கமான அலுவலக நேரங்களில் +94 112 338 837 என்ற தொலைபேசி இலக்கம் மற்றும் repatriation.consular@mfa.gov.lk எனும் மின்னஞ்சல் முகவரி ஊடாக தொடர்பு கொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles