ரஷ்ய போரை நிறுத்துமாறு அமெரிக்காவிடம் உக்ரைன் கோரிக்கை!

ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையில் ஏற்படுத்தப்பட்டுள்ள தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தத்தை உக்ரைன் வெளிவிவகார அமைச்சர் Andrii Sybiha வரவேற்றுள்ளார்.

ஹார்முஸ் நீரிணைப்பில் நிலவிய பதற்றம் தணிந்திருப்பதை வரவேற்றுள்ள அவர், இதேபோன்றதொரு உறுதியான நடவடிக்கையை ரஷ்யாவுக்கு எதிராகவும் அமெரிக்கா எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

வாஷிங்டனின் இத்தகைய தீர்க்கமான முடிவுகள் மட்டுமே உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பைத் தடுத்து அமைதியை நிலைநாட்ட உதவும் என்று அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

சர்வதேச விவகாரங்களில் அமெரிக்கா காட்டும் இந்தத் துணிச்சலை ரஷ்யப் போரை முடிவுக்குக் கொண்டுவரவும் பயன்படுத்த வேண்டும் என்பதே உக்ரைன் தரப்பு வாதமாக உள்ளது.

அதேவேளை, ஈரான், அமெரிக்கா போர் நிறுத்தத்தை ஜேர்மன், ஓமான் உட்பட மேலும் பல நாடுகளும் வரவேற்றுள்ளன.

Related Articles

Latest Articles