சலுகை, சுகபோகம் இல்லாத அரசியலையே முன்னெடுக்கின்றோம்

“சலுகை மற்றும் சுகபோகங்கள் இல்லாத, மக்களுக்கான அரசியலை முன்னெடுத்ததாலேயே மக்கள் எமக்கு ஆணையளித்தனர். அதற்கமையவே நாம் தற்போது செயல்பட்டு வருகிறோம். மக்கள் பணத்தை வீணடிக்கும் வகையில் நாம் எவ்வித சலுகைகளையும் பெறவில்லை,” என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சு மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்த 15 மாவட்ட கடற்றொழில் அலுவலகங்களுக்கு புதிதாக உள்வாங்கப்பட்டுள்ள 112 கடற்றொழில் உத்தியோகத்தர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (19) கொழும்பில் அமைந்துள்ள தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறினார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்:

“இன்று நியமனம் பெற்றுள்ள எவரும் எங்களைத் தொடர்புகொண்டு கோரிக்கை வைக்கவில்லை. அரசியல் சிபாரிசுகளின் அடிப்படையில் ஆள்தேர்வு செய்யப்படுவதும் இல்லை. அனைத்து நியமன நடைமுறைகளும் முறைப்படியே பின்பற்றப்படுகின்றன. இதில் எந்தவிதக் கட்சிப் பாகுபாடும் காட்டப்படவில்லை, திறமையானவர்களுக்கே நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இன்று பதவி நியமனம் பெறும் நீங்கள் இதே நிலையிலேயே நீடிக்கப் போவதில்லை. எதிர்காலத்தில் உங்களுக்குப் பதவி உயர்வுகளும் சம்பள உயர்வுகளும் கிடைக்கப்பெறும்.

டிஜிட்டல் துறை குறித்த அனுபவமும் தொழில்நுட்ப அறிவும் உங்களுக்கு உண்டு. உங்களுக்குத் தேவையான வசதிகளை நாம் செய்து தருவோம். அவற்றைப் பயன்படுத்தி, எமது கடற்றொழிலாளர்களுக்கும் டிஜிட்டல் மற்றும் நவீன தொழில்நுட்பம் சார்ந்த அறிவை வழங்கும் வேலைத்திட்டங்களை நீங்கள் முன்னெடுக்க வேண்டும்.

இந்த ஆண்டு நிறைவடைவதற்குள் அனைத்துக் கடற்றொழில் அதிகாரிகளுக்கும் மின்சார மோட்டார் சைக்கிள் (Electric Motorcycle) ஒன்றை வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளோம். இதற்காக எமது அமைச்சின் செயலாளர் பெரிதும் முயன்றுள்ளார்.

எனவே, நீங்கள் உங்களின் சேவையை மக்களுக்குச் சிறப்பாக வழங்க வேண்டும்.

அதேவேளை, சலுகைகளுக்காகவோ சுகபோகங்களுக்காகவோ நாங்கள் அரசியலுக்கு வரவில்லை. எமது அணியின் அரசியலே அதுதான். இதனால்தான் மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவாக ஆணையளித்தனர்.

அமைச்சர்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்படும் சலுகைகளை நாம் நிராகரித்துள்ளோம். ஜனாதிபதியும் பிரதமரும் கூட வீண் விரயங்களைச் செய்யாமல், மக்களின் பணத்தைப் பாதுகாப்பாகப் பயன்படுத்தி வருகின்றனர். அமைச்சர்களுக்குரிய உத்தியோகபூர்வ மாளிகைகளை நாங்கள் பெறவில்லை; கூடுதல் பாதுகாப்பையும் கோரவில்லை,” என்று அவர் தெரிவித்தார்.

 

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles