இ.தே.தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவராகிறார் சாகல! யோகராஜனுக்கு பொதுச்செயலாளர் பதவி?

இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவராக சாகல ரத்நாயக்கவை நியமிக்க ஐக்கிய தேசியக்கட்சி திட்டமிட்டுள்ளது என தெரியவருகின்றது.

இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் பதவியிலிருந்து விலகவுள்ளதாக மைச்சர் ஹரின் பெர்னாண்டோ அறிவித்துள்ளார். அடுத்தவாரம் அவர் பதவி விலகுவார்.

இந்த இடத்துக்கே சாகல ரத்நாயக்க நியமிக்கப்படவுள்ளார் என தெரியவருகின்றது.

பொதுச்செயலாளராக செயற்படும் வடிவேல் சுரேசுக்கு பதிலாக, யோகராஜனை அப்பதவிக்கு நியமிப்பது குறித்தும் பேச்சு அடிபடுகின்றது.

இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் ஐக்கிய தேசியக் கட்சியின் பழமையான தொழிற்சங்கங்களில் ஒன்றாகும்.

Related Articles

Latest Articles