இ.தொ.காவில் இணைந்து, ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டு சேர்கிறாரா வேலுகுமார்?

ஐக்கிய தேசியக் கட்சி அல்லது இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுடன் இணைந்து அரசியல் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார் என வெளியாகும் தகவல்களை ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் இன்று (09.12.2022) நிராகரித்துள்ளார்.

” மக்கள் பக்கம் நின்று, மக்களுக்கான அரசியலையே,  மனசாட்சியின் பிரகாரம் இதுவரை நான் முன்னெடுத்துவந்தேன். இனியும் அதே வழியில்தான் என் பயணம் தொடரும். ” – எனவும் வேலுகுமார் எம்.பி. தெரிவித்தார்.

2023 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் நேற்று (08) நடைபெற்றது. இதன்போது வேலுகுமார் எம்.பி. நடுநிலை வகித்தார்.

தன்னிச்சையான முடிவுகளை எடுத்து , தடம்மாறி பயணிக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணி மக்கள் வழிக்க வர வேண்டும் என்பதற்காகவே தான் இவ்வாறானதொரு நிலைப்பாட்டை எடுத்ததாக வேலுகுமார் விளக்கமளித்தார்.

எனினும், வேலுகுமாரின் நிலைப்பாடு தொடர்பில் சமூக ஊடகங்களில் பலகோணங்களில் கருத்துகள் உலாவின. ஐக்கிய தேசியக்கட்சி பக்கம் செல்ல போகின்றார் எனவும், இ.தொ.காவுடன் இணையவுள்ளார் எனவும்,  இதற்கான பேச்சுகள் இடம்பெற்றுள்ளன எனவும் கூறப்பட்டது.

இந்நிலையிலேயே அத்தகவல்களை வேலுகுமார் எம்.பி. மறுத்துள்ளார்.

அத்துடன்,  நடுநிலை தொடர்பான தனது நிலைப்பாட்டை திரிபுபடுத்தி, ராஜபக்ச ஆதரவு, ரணில் ஆதரவு, அரசுக்கான ஆதரவு என முத்திரைக் குத்தி , வதந்திகளை பரப்பி,  அரசியல் சேறுபூசும் பிரச்சாரத்தில் சிலர் ஈடுபட்டுள்ளனர் எனவும்,  தனது தவறை மூடிமறைப்பதற்காக இப்படியான அநாகரீக அரசியலை முன்னெடுக்கின்றனர் எனவும் வேலுகுமார் எம்.பி. சுட்டிக்காட்டினார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles