இ.போ.ச. பஸ் மோதி குடும்பஸ்தர் பலி!

இ.போ.ச. பஸ் மோதி குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சி , பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இத்தாவில் பகுதியில் இடம்பெற்ற இந்த விபத்தில் முத்தையா கந்தசாமி (வயது 59) என்பவரே உயிரிழந்தவராவார்.

கண்டியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த இ.போ.ச. பஸ் மோதியதில் இந்த மரணம் ஏற்பட்டுள்ளது.

பஸ்ஸின் சாரதி தப்பியோட முயன்ற நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பில் பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Latest Articles