பிரித்தானிய-ஈரானிய இரட்டைப் பிரஜையான அலிரேசா அக்பரிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் அலிரேசா அக்பர் தனிமை சிறைக்கு மாற்றப்பட்டதாக அவரது மனைவி தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்திற்காக உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்ட, முன்னாள் துணை ஈரானிய பாதுகாப்பு அமைச்சர் 2019ம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.
எனினும், அவர் அந்த குற்றச்சாட்டை மறுத்திருந்தார்.
இந்நிலையில், ஈரானிய நீதித்துறையின் அதிகாரப்பூர்வ ஊடகமான மிசான், திகதியை குறிப்பிடாமல் சனிக்கிழமை அன்று அலிரேசா அக்பரி தூக்கிலிடப்பட்டதாக அறிவித்துள்ளது.
இந்த மரணதண்டனை “ஒரு காட்டுமிராண்டித்தனமான ஆட்சியால் மேற்கொள்ளப்பட்ட கொடூரமான மற்றும் கோழைத்தனமான செயல்” என்று பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.
ஈரானின் ஆட்சியாளர்கள் தங்கள் மக்களின் மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கவில்லை என்று ரஷி சுனக் சுட்டிக்காட்டியுள்ளார்.