மத்திய கிழக்கிலுள்ள துறைமுகங்களை தாக்குவோம்!

ஈ​ரான் துறை​முகங்​கள் தாக்​கப்​பட்​டால் மத்​திய கிழக்கு நாடு​களின் துறை​முகங்​களை தாக்​கு​வோம் என்று ஈரான் ராணுவம் எச்​சரிக்கை விடுத்​துள்​ளது.

இதுதொடர்​பாக ஈரான் ராணுவ மூத்த தளபதி லெப்​டினென்ட் கர்​னல் இப்​ராகிம் ஸோல்​ப​காரி டெஹ்​ரானில் நேற்று கூறிய​தாவது:

” எங்​கள் எதிரி​களின் கப்​பல்​கள் ஹார்​முஸ் நீரிணையை கடக்க அனு​மதி வழங்​க​மாட்​டோம்.

இந்த நீரிணை தொடர்ந்து எங்​களின் கட்​டுப்​பாட்​டில் மட்​டுமே இருக்​கும்.

சர்​வ​தேச சட்ட விதி​களுக்கு எதி​ராக அமெரிக்க ராணுவம் செயல்​பட்டு வரு​கிறது. ஹார்​முஸ் நீரிணையை மூடு​வோம் என்று அமெரிக்கா அறி​வித்​திருப்​பது, கடல் கொள்​ளைக்கு சமம் ஆகும்.

ஈரான் துறை​முகங்​கள் தாக்​கப்​பட்​டால் பெர்​சிய வளை​கு​டா, ஓமன் கடல் பகு​தி​யில் உள்ள அனைத்து துறை​முகங்​களின் பாது​காப்பு கேள்விக் குறி​யாகும். எங்​கள் துறை​முகங்​கள் குறிவைக்​கப்​பட்​டால், மத்​திய கிழக்கு நாடு​களின் துறை​முகங்​களை மிகக் கடுமை​யாக தாக்​கு​வோம். இவ்​வாறு இப்ராகிம் தெரி​வித்​தார்.

Related Articles

Latest Articles