இலங்கையை வீழ்த்தி 600 ஆவது டெஸ்ட் போட்டியில் சாதனை படைத்தது இந்தியா

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 165 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கின்றது.

இடதுகை சுழற்பந்துவீச்சாளர் மானவ் சுதர் (Manav Suthar) இப்போட்டியில் மொத்தம் 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.

தனது இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய சுதர், துல்லியமான பந்துவீச்சை வெளிப்படுத்தி இந்தியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க 600-ஆவது டெஸ்ட் போட்டியில் நினைவுகூரும்படியான வெற்றியை உறுதி செய்தார்.

முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய அவர், இரண்டாவது இன்னிங்ஸில் 55 ரன்களைக் கொடுத்து 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இதன் மூலம், போட்டியின் கடைசி நாளான புதன்கிழமை மதிய உணவுக்குப் பிறகு, இலங்கையை தனது இரண்டாவது இன்னிங்ஸில் 206 ரன்களுக்குச் சுருட்ட இந்தியாவுக்கு உதவினார்.

372 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கிப் களமிறங்கிய இலங்கை அணியில், இரு இன்னிங்ஸ்களிலும் அதிக ரன்களைக் குவித்த சோனல் தினுஷாவைத் தவிர, மற்ற ஏனைய வீரர்கள் எவரும் நிலைத்து நின்று ஆடவில்லை.

இந்த வெற்றி குறித்து இந்திய அணித் தலைவர் சுப்மன் கில் கூறுகையில்,

“இந்த வெற்றி மிகுந்த மனநிறைவைத் தருகிறது. வானிலை காரணமாகப் போட்டி தொடருமா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால், அணி வீரர்கள் அதற்குச் சிறப்பாகப் பதிலளித்தனர்,” என்றார்.

கடைசி நாள் ஆட்டத்தை 84-4 என்ற கணக்கில் தொடங்கிய இலங்கை அணி, காலை நேர ஆட்டத்திலேயே 2 விக்கெட்டுகளை இழந்தது. அதன் பின், இந்திய பந்துவீச்சாளர்கள் எஞ்சிய வரிசை பேட்டர்களை விரைவாக ஆட்டமிழக்கச் செய்தனர்.

அணித் தலைவர் தனஞ்சய டி சில்வா (59) மற்றும் முதல் இன்னிங்ஸில் சதமடித்த தினுஷா ஆகியோர் இணைந்து 5-ஆவது விக்கெட்டுக்கு 95 ரன்கள் சேர்த்து, இரண்டு மணி நேரத்திற்கும் மேலாகப் போராடினர்.

தனது ஆட்டத்தின் தொடக்கத்தில் ‘நோ-பால்’ மூலம் ஆட்டமிழப்பதில் இருந்து தப்பிய டி சில்வா, கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி தனது 20-ஆவது அரைசதத்தைப் பதிவு செய்தார்.

ஆனால், ரவீந்திர ஜடேஜாவின் பந்தில் ‘ஸ்வீப்’ ஷாட் அடிக்க முயன்று, ‘ஷார்ட் ஃபைன் லெக்’ திசையில் நின்று கொண்டிருந்த சுதரிடம் பிடிபட்டு வெளியேறினார்.

“காலியில் நான்காவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்வது எளிதல்ல” என்று கூறிய டி சில்வா, “அவர்கள் நாணய சுழற்சியில் வென்று போதிய ரன்களைக் குவித்தனர். நாங்கள் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்ததால் ஆட்டம் கைநழுவிப் போனது,” என்றார்.

முதல் இன்னிங்ஸில் அரைசதமடித்த விக்கெட் காப்பாளர் நிரோஷன் திக்வெல்ல, இரண்டாவது இன்னிங்ஸில் 10 ரன்களுடன் பிரசித் கிருஷ்ணாவின் பந்தில் விக்கெட் காப்பாளரிடம் பிடிபட்டு வெளியேறினார்.

மதிய உணவுக்குப் பின், ஒரே ஓவரில் ரன் எதுவும் கொடுக்காமல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இலங்கை அணியின் கீழ்வரிசையைச் சரிவுக்குள்ளாக்கினார் சுதர். அதனைத் தொடர்ந்த தனது அடுத்த ஓவரில் கேஷர நுவந்தாவின் விக்கெட்டையும் வீழ்த்தினார். இதனால் மதிய உணவுக்குப் பின் 36 நிமிடங்களிலேயே இலங்கை அணி சுருண்டது. இலங்கை இழந்த கடைசி 4 விக்கெட்டுகளும் வெறும் 7 ரன்களுக்குள் விழுந்தன; அவை அனைத்தையும் சுதரே கைப்பற்றினார்.

25 வயதான தினுஷா (84), சக வீரர்களின் ஒத்துழைப்பு இல்லாத நிலையிலும் தனியாளாகப் போராடினார். தனது 4-ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய அவர், தனது வயதுக்கு மீறிய முதிர்ச்சியை வெளிப்படுத்தி, இந்திய சுழற்பந்துவீச்சாளர்களின் பந்துகளை திறம்பட எதிர்கொண்டார். 128 பந்துகளைச் சந்தித்த அவர் 8 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 84 ரன்கள் எடுத்திருந்தபோது, ‘லெக் ஸ்லிப்’ திசையில் துருவ் ஜூரெலிடம் பிடிபட்டு ஆட்டமிழந்தார்.

சுதரைத் தவிர, இந்திய அணியில் மாற்று வீரராகக் களமிறங்கி முதல் இன்னிங்ஸில் 167 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 44 ரன்களும் குவித்த தேவ்தத் படிக்கல் முக்கியப் பங்காற்றினார்.

“ஆடுகளத்தில் இயற்கையான தேய்மானம் இருந்தது, ஆனால் அது ஒரு நல்ல டெஸ்ட் ஆடுகளம். மூன்றாம் நாளில் இருந்து பந்து நன்றாகச் சுழன்றது. இறுதியில், தங்களின் திறமையைச் சிறப்பாகப் பயன்படுத்தியவர்களுக்கே வெற்றி சாத்தியமானது,” என்று படிக்கல் தெரிவித்தார்.

இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் தொடங்கவுள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles