‘ஈஸிகேஸ் மோசடி’ – லிந்துலையில் ஒருவர் கைது! லட்சத்தை இழந்த ராகலைவாசி!!

ஈஸிகேஸ் மூலம் ஒரு இலட்சம் ரூபாய்க்கு மேல் பண மோசடியில் ஈடுப்பட்ட குற்றச்சாட்டில் (32) வயதுடைய நபர் ஒருவரை ராகலை பொலிஸார் நேற்று முன்தினம் மாலை கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹென்போல்ட் பகுதியை சேர்ந்தவர் என பொலிசார் தெரிவித்தனர்.

இவர் தான் டயலொக் நிறுவனத்தில் தொழில் செய்வதாக கையடக்க தொகைபேசியில் இராகலை கோனப்பிட்டிய பிரதேசத்தில் நபர் ஒருவருக்கு கடந்த இரண்டு வாரத்திற்கு முன் தொடர்பு கொண்டுள்ளார்.

இதன்போது டயலொக் வாடிக்கையாளரான தங்களுக்கு பணப் பரிசு கிடைக்கப் பெற்றுள்ளது. இப் பரிசு தொகையை பெற்றுக்கொள்ள ஒரு இலட்சம் ரூபாவை ஈஸி கேஸ் மூலம் அனுப்புங்கள் என தெரிவித்துள்ளார்.

இதையடுத்து குறித்த நபர் ஈஸி கேஸ் மூலமாக பணத்தை அனுப்பி வைத்துள்ளார்.ஆனால் பரிசு கிடைக்கவில்லை எனவும் கைது செய்யப்பட்டுள்ள நபரின் தொலைபேசியும் இயங்கவில்லை என கோனப்பிட்டிய நபர் இராகலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இந்த நிலையில் பண மோசடி செய்த நபரை கைது செய்துள்ளதாக இராகலை பொலிசார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர் தெரிவித்ததாவது,..

தனக்கு இனந்தெரியாத நபர் ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தங்களுக்கு டயலொக் நிறுவனத்தில் தொழில் வழங்கப்பட்டுள்ளது என கூறி கோனப்பிட்டிய பிரதேச நபரின் கையடக்க தொலைபேசி இலக்கத்தை வழங்கி பண பரிசு கிடைத்துள்ளது அதை பெற ஒரு இலட்சம் ரூபாவுக்கு அதிகமான தொகையை ஈஸி கேஸ் மூலம் அனுப்பும்படி அறிவிக்குமாறு தெரிவிக்கப்பட்டதால் தான் இதை அறிவித்து ஈஸி கேஸ் மூலம் அனுப்பிய பணத்தை பெற்றதாக விசாரணையில் தெரிவித்துள்ளார். அத்துடன் தரகராகவே தான் செயல்படுவதாகவும், இவ்வாறு பெறப்பட்ட பணத்தை இனந்தெரியாத நபருக்கு அனுப்பியதாகவும் அதில் தரகர் பணமாக ஒரு சிறிய தொகை தனக்கு வழங்கப்பட்டதாகவும் கைது செய்யப்பட்ட நபர் விசாரணையில் பொலிசாருக்கு தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்த பொலிசார், இராகலை பிரதேசத்தில் தொடர்ந்தும் இடம்பெற்ற ஈஸி கேஸ் பண மோசடி தொடர்பில் குறித்த நபருக்கு தொடர்பு உள்ளதா, இதன் பின்புலத்தில் செயற்படும் குழு தொடர்பில் விசாரணைகளை செய்து வருவதாகவும்,கைது செய்யப்பட்டுள்ள நபரை வலப்பனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இராகலை பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles