உக்ரேனில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு வாழும் இலங்கையர் தொடர்பில் மிகுந்து அவதானத்துடன் செயற்படுவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
ரஷ்யா மற்றும் உக்ரேனுக்கிடையில் போர்மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் அங்கு வாழும் தமது நாட்டு பிரஜைகளை உலக நாடுகள் திருப்பி அழைத்துவருகின்றன.
இந்நிலையில் உக்ரேனில் வாழும் இலங்கையர்கள் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. அங்கு 42 இலங்கையர்கள் வாழ்கின்றனர் எனவும், அவர்களில் எழுவர் மாணவர்கள் எனவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன், உக்ரேனிலுள்ள இலங்கையர்கள் எவ்வித பிரச்சினையும் இன்றி, வாழ்ந்து வருகின்றனர். இலங்கை தூதரகமொன்று யுக்ரேனில் இல்லாத நிலையில், துருக்கியிலுள்ள தூதரகத்தின் ஊடாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன என்றும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
குறிப்பாக உக்ரேனில் அவசர நிலைமை ஏற்படும் பட்சத்தில், அங்குள்ள இலங்கையர்களை துரித கதியில் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என வெளிவிவகார அமைச்சு உறுதியளித்துள்ளது.










