உக்ரைனின் கைகள் மேலோங்கும் வரை தாங்கள் ஓய்வெடுக்கப்போவது இல்லை என பிரிட்டன் பிரதமர் லிஸ் டிரஸ் தெரிவித்துள்ளார்.
அத்துடன், ரஷியாவை தோற்கடிக்கும் வரை உக்ரைனுக்கு தேவையான அனைத்து ராணுவ உதவிகளும் தொடர்ந்து வழங்கப்படும் எனவும் பிரதமர் லிஸ் டிரஸ் உறுதியளித்துள்ளார்.
உக்ரைனுக்கு எதிரான போரை தீவிரப்படுத்தும் நோக்கில் படைகளை திரட்ட ரஷிய அதிபர் புதின் உத்தரவிட்டுள்ள நிலையிலேயே, உக்ரைனின் கைகள் மேலோங்கும் வரை தாங்கள் ஓய்வெடுக்கப்போவது இல்லை என பிரிட்டன் அறிவித்துள்ளது.