உடற்பாகங்கள் சிதைவடைந்த நிலையில் கரையொதுங்கிய ஆணின் சடலம்

யாழ்ப்பாணம் – அல்லைப்பிட்டி கடற்கரையில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கரையொதுங்கியிருந்த நிலையில் குறித்த சடலம் நேற்று(13) மாலை மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலத்தின் உடற்பாகங்களில் பல பகுதிகள் சிதைந்து போயுள்ளதால் அடையாளம் காண்பதில் சிக்கல் நிலவுவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சடலம் தற்போது யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை காங்கேசன்துறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related Articles

Latest Articles