மத்திய மாகாண ஆசிரியர் உதவியாளர்களை ஆசிரியர் சேவைக்கு உள்வாங்குவதற்கான நியமனக் கடிதங்கள் எதிர்வரும் மூன்றாம் திகதி வழங்கப்பட இருக்கின்றன என்று மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும், காங்கிரஸ் கல்வியல் ஒன்றியத்தின் தலைவருமான கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி 306 ஆசிரியர் உதவியாளர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்படவிருந்தன. ஆனால் அப்போதைய நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச இந்த நியமனம் வழங்கப்படுவதை நிறுத்தி வைக்குமாறு உத்தரவிட்டதானல் மத்திய மாகாண ஆளுநர் நியமனம் வழங்குவதிலிருந்து பின் வாங்கியிருந்தார்.
இது சம்பந்தமாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளர் ஜீவன் தொண்டமான் விடயத்தை முன்னிலைப்படுத்தி அரச அழைத்திருந்த சர்வ கட்சி மாநாட்டை புறக்கணித்திருந்தார்.
சர்வ கட்சி மாநாட்டில் பின் இலங்கை தொழிலாளர் காங்கிரசை ஜனாதிபதி அழைத்து பேசியிருந்தார். நிலையில் குறிப்பிட்ட ஆசிரியர் உதவியாளர் நியமனத்தை விரைவில் வழங்குவதற்கு ஏற்பாடு செய்வதாக அந்த சந்திப்பின் போது உறுதியளிக்கப்பட்டது.
இதனடிப்படையில் இந்த நியமனத்தை வழங்குவதற்கு காலம் தாழ்த்தி எனும் எடுக்கப்பட்ட தீர்மானத்தை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வரவேற்கிறது எனவும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதித் தலைவர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.










