உயர்தரப்பரீட்சை குறித்து வெளியாகியுள்ள அறிவிப்பு

இந்த வருடம் நடைபெறவுள்ள உயர்தரப் பரீட்சை பிற்போடப்படமாட்டாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் விளக்கமளிக்கும் விசேட ஊடகவியலாளர்கள் சந்திப்பு இன்று (30) பரீட்சைகள் திணைக்களத்தில் நடைபெற்ற போது அவர் இதனை தெரிவித்தார்.

அதன்படி, நவம்பர் 25 முதல் டிசம்பர் 20 வரை திட்டமிட்டபடி பரீட்சை நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

Related Articles

Latest Articles