‘உரிமையை தவறாக பயன்படுத்த வேண்டாம்’ – பங்காளிகளுக்கு பீரிஸ் உபதேசம்

” அரசின் செயற்பாடுகள் தொடர்பில் விமர்சனங்களை முன்வைப்பதற்கு பங்காளிக்கட்சிகளுக்கு உரிமை இருக்கின்றது. ஆனால் அந்த உரிமையை பொருத்தமான இடத்திலேயே பயன்படுத்த வேண்டும்.” – என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” பல்வேறு அரசியல் நிலைப்பாடுகளைக்கொண்ட கட்சிகள், பொதுவானதொரு இலக்கை அடைவதற்காக, பொதுவானதொரு வேலைத்திட்டத்தின்கீழ் இணைவதுதான் கூட்டணி அரசாகும். அங்கு கருத்துகள் மற்றும் விமர்சனங்கள் இருக்க வேண்டியது ஜனநாயகப் பண்பாகும். பயணம் தவறெனில் அதனை சுட்டிக்காட்ட வேண்டிய பொறுப்பு பங்காளிகளுக்கு இருக்கின்றது.

அதற்காக ‘மைக்’ கிடைக்கும் இடங்களில் எல்லாம் பொறுப்பற்ற விதத்தில் கருத்துகளை வெளியிடுவது ஏற்புடைய நடவடிக்கை அல்ல. நாடாளுமன்றக்குழுக் கூட்டம் கூட்டம் நடைபெறும். அமைச்சரவைக் கூட்டமும் இடம்பெறும். அப்போது விமர்சனங்களை முன்வைக்கலாம். தவறுகளை சுட்டிக்காட்டலாம்.

அதனைவிடுத்து கூட்டு பொறுப்பைமீறும் வகையில் பொதுவெளியில் விமர்சங்களை முன்வைப்பது ஏற்புடைய நடவடிக்கை அல்ல.” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles