உலகக்கிண்ணம் – 2 ஆம் சுற்று இன்று ஆரம்பம்!

கால்பந்து உலகக்கிண்ண தொடரில்,  இரண்டாவது சுற்றுக்கு 16 நாடுகள் முன்னேறியுள்ள நிலையில், இதில் இருந்து 8 அணிகள் காலிறுதிக்கு தகுதிபெறும்.

உலக கோப்பை கால்பந்து போட்டி கடந்த மாதம் 20 ஆம் திகதி கட்டாரில் ஆரம்பமாகியது.  இதில் 32 நாடுகள் பங்கேற்றன. அவை 8 பிரிவாக பிரிக்கப்பட்டன.

ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம்பெற்றன. லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் நாக்-அவுட் ரவுண்டான 2-வது சுற்றுக்கு நுழையும்.

நெதர்லாந்து , செனகல் (குரூப் ஏ), இங்கிலாந்து, அமெரிக்கா (பி), அர்ஜென்டினா, போலந்து (சி), பிரான்ஸ், ஆஸ்திரேலியா (டி), ஜப்பான், ஸ்பெயின், (இ), மொராக்கோ , குரோஷியா (எப்) , பிரேசில், சுவிட்சர்லாந்து (ஜி), போர்ச்சுக்கல், தென் கொரியா (எச்) ஆகிய 16 நாடுகள் 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

இந்நிலையில், இரண்டாவது சுற்று ஆட்டங்கள் இன்று தொடங்குகிறது. இந்த சுற்றில் 16 நாடுகள் விளையாடும். இதில் இருந்து 8 அணிகள் காலிறுதிக்கு தகுதிபெறும். இன்று (சனிக்கிழமை) நடைபெறும் 2-வது சுற்று ஆட்டங்களில் ஏ பிரிவில் முதல் இடத்தை பிடித்த நெதர்லாந்து, பி பிரிவில் 2-வது இடத்தை பிடித்த அமெரிக்கா இரவு 8.30 மணிக்கு மோதுகின்றன.

இதேபோல், சி பிரிவில் முதல் இடத்தை பிடித்த அர்ஜென்டினா, டி பிரிவில் 2-வது இடத்தை பிடித்த ஆஸ்திரேலியா நள்ளிரவு 12.30 மணிக்கு மோதுகின்றன.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles