உள்ளூராட்சிசபைத் தேர்தலை நடத்தக்கோரியும் மின் கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்துக்குள் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளன.
ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி மற்றும் சுதந்திர மக்கள் கூட்டணி உள்ளிட்ட எதிரணிகள் இணைந்தே நாளை 21 ஆம் திகதி இப்போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளன.
மேற்படி இரு விடயங்களையும் முன்வைத்து அரசுக்கு எதிராக நாட்டு மக்கள் வீதியில் இறங்கி போராடி வருகின்றனர். இந்த போராட்டத்தை மேலும் வலுப்படுத்தும் நோக்கிலேயே நாளை நாடாளுமன்றத்துக்குள்ளும் போராட்டம் நடத்தப்பட உள்ளது என்று எதிர் கட்சிகள் தெரிவித்துள்ளன.
