ஊரடங்குவேளையில் பயங்கரம் – மூவர்மீது வாள்வெட்டு!

நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மோட்டார் சைக்கிளில் துரத்தி வந்து மூவர் மீது சரமாரியான வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் யாழ்ப்பாணத்தில் இன்று மாலை இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் குருநகர் கடற்கரை வீதியில் திருச்சிலுவை சுகநல நிலையத்துக்கு அண்மையாக இன்று மாலை 4 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தாக்குதலுக்குள்ளானவர்களையும் தாக்குதல் நடத்தியவர்களையும் தமக்கு தெரியாது என்றும் அவர்கள் வேறுபகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.

ஒரு மோட்டார் சைக்கிளில் மூவர் பயணித்த நிலையில் அவர்களை இரண்டு மோட்டார் சைக்கிள்களில் துரத்தி வந்த நால்வர் இந்தத் தாக்குதலை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

தாக்குதலில் படுகாயமடைந்த மூவரும் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களினால் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

மூவரில் ஒருவரின் கால்கள் இரண்டும் கடுமையாக வெட்டுக்காயங்களுக்கு உள்ளாகியதாக அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் குருநகர் பொலிஸ் காவலரணுக்கு தகவலளிக்கப்பட்ட போதும் சுமார் ஒரு மணிநேரமாக பொலிஸார் சம்பவ இடத்துக்கு வருகை தரவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டு பொலிஸாரும் முப்படையினரும் வீதிச் சுற்றுக்காவல் பணிகளில் ஈடுபடும் வேளையில் வன்முறைக் கும்பல் இந்தத் தாக்குதலை முன்னெடுத்துள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles