எகிப்தில் கோர விபத்து; வாகனம் தீப்பற்றி எரிந்ததில் 31 பேர் பலி!

எகிப்தில் பெட்ரோலியப் பொருட்களை ஏற்றிச் சென்ற வாகனம் ஒன்று கவிழ்ந்து தீப்பற்றியதில் குறைந்தது 31 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 21 பேர் காயமடைந்துள்ளனர்.

எகிப்தின் தலைநகர் கெய்ரோவைச் சுற்றியுள்ள பிரதான சுற்றுவட்ட வீதியில் நேற்று (25) இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கிஸா மாகாணத்தின் அல்-வாராக் பகுதியில் சுரங்கப்பாதைக்கு மேலாகச் சென்றுகொண்டிருந்தபோது பெட்ரோலியப் பொருட்களை ஏற்றிச் சென்ற வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் தீ பரவியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தத் தீ விபத்தில் கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட சுமார் 27 வாகனங்கள் தீக்கிரையாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்தில் மீட்புப் பணிகளுக்காக 39 அவசர அம்புலன்ஸ் வண்டிகள் ஈடுபடுத்தப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், உயிரிழந்தவர்களில் அடையாளம் காணப்படாதவர்களை அடையாளம் காண்பதற்காக டிஎன்ஏ மாதிரிகளைப் பெறுவதற்கு பொது வழக்கறிஞர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.

விபத்துக்கான காரணம் தொடர்பில் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Articles

Latest Articles