எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தயாராக இருப்பதாக அதன் தலைவர் மற்றும் சிறிலங்கா முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அநுராதபுரம் விகாரைக்கு நேற்று (27) விஜயம் செய்த போதே முன்னாள் அதிபர் இதனைத் தெரிவித்துள்ளார்.
வரலாற்று சிறப்புமிக்க ஜயர சிறி மகா போதியை முன்னிட்டு சமய வழிபாடுகளில் ஈடுபட்ட மகிந்த ராஜபக்ச அதமஸ்தானாதிபதி பூஜ்ய பல்லேகம ஹேமரதன தேரர் பார்வையிட்டார்.
பின்னர், ருவான்வெளி மகா சாயியை வழிபட்ட மகிந்த ராஜபக்ச, ருவன்வெளி சைத்தியராமதிகாரி வணக்கத்துக்குரிய ஈதல்வெதுனுவே ஞானதிலக தேரரையும் தரிசித்தார்.
பின்னர், தேர்தல் தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தமது கட்சி பலமாக இருப்பதாகத் தெரிவித்தார்.
