எனது அரசியல் ஆட்டம் இனி ஆரம்பம் – ஜனக ரத்னாயக்க சூளுரை

” 75 வருடகால சாபத்தில் இருந்து இந்நாட்டை மீட்டெடுப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மக்களுக்காக மக்கள் பக்கம்நின்று சேவையாற்ற நான் தயார்.”

இவ்வாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜகன ரட்னாயக்க தெரிவித்தார்.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவரை நீக்குவதற்கான பிரேரணை 46 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டது. அதன்பின்னர் ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்தே ஜனக்க மேற்படி அறிவிப்பை விடுத்தார்.

” அரசியலுக்கு வருவதற்கு எனக்கு இருந்த தடையும் இதன்மூலம் நீங்கியுள்ளது. இனி மக்களுக்கான எனது பயணம் தொடரும். மக்களுக்காக எந்தவொரு தியாகத்தையும் செய்வதற்கு நான் தயார்.” – எனவும் அவர் கூறினார்.

Related Articles

Latest Articles