” என்றும் நாம் உங்களுடன்” – பலஸ்தீன தூதுவரை சந்தித்தார் மஹிந்த

இஸ்ரேலுக்கும் பலஸ்தீனத்துக்கும் இடையில் அதிகரித்து வரும் மோதல்களுக்கு மத்தியில் பலஸ்தீன மக்களுடன் ஐக்கியமாக நிற்கும் முகமாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று கொழும்பில் உள்ள பலஸ்தீன தூதரகத்துக்கு விஜயம் செய்தார்.

இலங்கைக்கான பலஸ்தீனத் தூதுவருடனான கலந்துரையாடலின்போது, உலகில் எங்கும் பயங்கரவாதத்துக்கு இடமில்லை என்றும், போர் தீர்வு அல்ல என்றும் மஹிந்த தெரிவித்தார்.

போரில் இலங்கையின் அனுபவங்களைக் குறிப்பிட்ட மஹிந்த, சமாதானத்தின் அவசரத்தை வலியுறுத்தினார்.

“பலஸ்தீனத்துடனான ஒற்றுமைக்கான இலங்கை சங்கத்தின் ஸ்தாபகத் தலைவர் என்ற முறையில் நான் பலஸ்தீன நோக்கத்தை தொடர்ந்து ஆதரித்து வருகின்றேன். போர் ஒரு தீர்வாகாது.” – என்று மஹிந்த மேலும் கூறினார்.

மஹிந்த, ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியிலும் இஸ்ரேல் – பலஸ்தீன விவகாரத்தில் பலஸ்தீனத்துக்கான ஆதரவையே வெளிப்படுத்தியிருந்தார்.

பலஸ்தீனத்துக்கு பத்து இலட்சம் அமெரிக்க டொலர்கள் நிதி உதவியையும் மஹிந்த 2014ஆம் ஆண்டு ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில் வழங்கியிருந்தார்.

பலஸ்தீனத்தின் நீண்டகால ஆதரவாளராக மஹிந்த இருந்து வருவதோடு பலஸ்தீன கூட்டொருமைப்பாட்டுக்கான இலங்கை சங்கத்தின் ஸ்தாபகத் தலைவராகவும் அவர் செயற்படுகின்றார்.

பலஸ்தீனத்தை ஒரு தேசமாக 1988ஆம் ஆண்டு இலங்கை அங்கீகரித்ததுடன் 2007ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பலஸ்தீனத்தில் ‘மஹிந்த ராஜபக்ச வீதி’ என ஒரு வீதிக்கு பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles