ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மேலும் சில நாடாளுமன்ற உறுப்பினர்களை வளைத்துபோடுவதற்குரிய நகர்வுகளில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஈடுபட்டுவருகின்றார் என தெரியவருகின்றது.
இதன்படி எதிர்வரும் 15 ஆம் திகதிக்குள் மேலும் 10 எம்.பிக்கள்வரை ரணில் பக்கம் செல்வார்கள் எனவும், இதன்படி மொட்டு கட்சியிலிருந்து சுமார் 100 எம்.பிக்கள்வரை ரணிலை ஆதரிக்கவுள்ளனர் எனவும் அறியமுடிகின்றது.
இந்நிலையில் மொட்டு கட்சி எம்.பிக்களை தமது பக்கம் தக்க வைத்துக்கொள்வதற்கும், ரணில் பக்கம் சென்றவர்களை மீள வளைத்துபோடுவதற்கும் பஸில் ராஜபக்ச நேரில் களமிறங்கியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
