பதுளை – பசறை பிரதான வீதியில் ஹிந்தகொட பகுதியில் அமைந்துள்ள ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலைய வளாகத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியருக்கும், வியாரகொட பகுதியைச் சேர்ந்த எரிபொருளை பெற்றுக்கொள்ள வந்த நபருக்கும் இடையே ஏற்பட்ட வாய் தகராறினால் , எரிபொருளை பெற்றுக் கொள்ள வந்த நபர் 9 mm ரக துப்பாக்கியை வானத்தை நோக்கி நான்கு தடவைகள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.
எவருக்கும் எது விதமான காயங்கள் ஏற்படாத போதிலும் சந்தேக நபரை கைது செய்யும் முகமாக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் இன்று அதிகாலை 12.05 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
ராமு தனராஜா
