எல்ஜின் தோட்டத்தில் மாதா சொரூபம் உடைப்பு!

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எல்ஜின் தோட்டத்தில் நேற்றிரவு, மாதா சொரூபமொன்று இனந்தெரியாத விசமிகளால் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சேதமாக்கப்பட்ட மாதா சொரூபத்தை விஷமிகள் ஆற்றில் வீசியுள்ளனர் என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த லிந்துலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

கடந்த 14 ஆம் திகதியும் லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாகசேனை பகுதியில் யேசுவின் திருவுரு சொரூபமும் உடைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

டி.சந்ரு செ.திவாகரன்

Related Articles

Latest Articles