எல்பிட்டிய பொலிஸ் பிரிவில் மூவர் சுட்டுக்கொலை: விசாரணை வேட்டை தீவிரம்!

எல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரண்டு இடங்களில் நேற்றிரவு(11) மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகங்கள் திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுக்களிடையேயான மோதல் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த இரண்டு துப்பாக்கிப் பிரயோகங்களும் ஒரே குழுவினால் மேற்கொள்ளப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

எல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிட்டிகல மற்றும் அம்பலாங்கொடையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகங்களில் மூவர் உயிரிழந்ததுடன், 06 பேர் காயமடைந்தனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பிட்டிகல – குருவல பகுதியில் வர்த்தக நிலையமொன்றுக்கு அருகில் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், மூவர் காயமடைந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர், சட்டத்தரணி நிஹால் தல்தூவ தெரிவித்தார்.

காயமடைந்த இரண்டு ஆண்களும் பெண்ணொருவரும் சிகிச்சைகளுக்காக கல்லிந்த பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் கொலைச் சம்பவமொன்றில் குற்றஞ்சாட்டப்பட்டவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபரை இலக்கு வைத்து, T56 ரக துப்பாக்கியை பயன்படுத்தி இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இதனிடையே, அம்பலாங்கொடை – கலபொட பகுதியில் நேற்றிரவு(11) நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்ததுடன் மேலும் மூவர் காயமடைந்தனர்.

இந்த இரண்டு துப்பாக்கிப் பிரயோகங்கள் தொடர்பில் கூட்டு விசாரணையை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினால் இந்த விசாரணை முன்னெடுக்கப்படுமென பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

பிட்டிகல துப்பாக்கிப் பிரயோகத்திற்கான காரணம் வெளியாகியுள்ள போதிலும், அம்பலாங்கொடை துப்பாக்கிச்சூட்டுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

எவ்வாறாயினும், திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுக்களினால் மேற்கொள்ளப்படும் இவ்வாறான கொலைச் சம்பவங்களை விரைவில் முடிவுக்கு கொண்டு வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுமென பொலிஸ்மா அதிபர் குறிப்பிட்டார்.

யுக்திய சுற்றிவளைப்புகளை தொடர்ந்தும் வலுப்படுத்தி, திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுக்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles