எல்ல பசறை வீதியில் அமைந்துள்ள சிறிய ஸ்ரீ பாதைக்கு இன்று (01) பயணித்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணியொருவர் தவறி விழுந்து காயமடைந்துள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவித்தனர் .
Madelene Rosemery Francesca என்ற 33 வயதுடைய பிரிட்டிஷ் பெண்ணொருவரே இவ்வாறு காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எல்ல பகுதியை பார்ப்பதற்காக வந்த இந்த பெண், இன்று (01) சிறிய ஸ்ரீ பாதையை பார்ப்பதற்கு மற்றவர்களுடன் பயணித்துக் கொண்டிருந்த போது, இன்று 10. 45 மணியளவில் திடீரென வழுக்கி விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பின்னர் அம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக பதுளை போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இது தொடர்பில் பதுளை போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவின் சிரேஷ்ட வைத்திய அதிகாரி டாக்டர் பாலித ராஜபக்ஷவிடம் வினாவிய போது, எல்ல பகுதியில் இருந்து விழுந்த வெளிநாட்டு பெண் ஒருவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டள்ளதாகவும் வலது கால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலதிக விசாரணைகளை எல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ராமு தனராஜா