‘எவ்வித நிபந்தனையுமின்றி 1000 ரூபா’ – வருகிறது விசேட சட்டம்!

” மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு எவ்வித நிபந்தனையுமின்றி ஆயிரம் ரூபாவை வழங்குமாறு வலியுறுத்தும் சட்ட திருத்தத்தை விரைவில் கொண்டுவரவுள்ளேன்.” – என்று தொழில் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெறும் குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த விடயத்தை தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. எனினும், அதில் சிற்சில பிரச்சினைகள் உள்ளன. நீதிமன்றத்திலும் வழக்கு இடம்பெறுகின்றது.

அந்த வழக்கு முடிவடைந்த பிறகு விசேட சட்டமொன்றை கொண்டுவருவேன். தொழிலாளர்களுக்கு எவ்வித நிபந்தனையுமின்றி ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கை அதன் ஊடாக மேற்கொள்ளப்படும்.

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சர்வதேச அமைப்புகளும் தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாக்குமாறு வலியுறுத்தியுள்ளன. அதற்கான பொறிமுறை உருவாக்கப்படும். அதற்கான நடவடிக்கையை நாம் முன்கூட்டியே ஆரம்பித்துவிட்டோம்.” – என்றார்.

Related Articles

Latest Articles