ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவராக சஜித் மீண்டும் தெரிவு!

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவராக சஜித் பிரேமதாச மீண்டும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் வருடாந்த மாநாடு பொரளை கெம்பல் மைதானத்தில் தற்போது நடைபெற்றுவருகின்றது.

இதன்போதே தலைவர் பதவிக்கு சஜித் பிரேமதாச ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டார்.

தவிசாளர் – சரத் பொன்சேகா
பொதுச்செயலாளர் – ரஞ்சித் மத்தும பண்டார
தேசிய அமைப்பாளர் – திஸ்ஸ அத்தநாயக்க
பொருளாளர் – ஹர்ஷ டி சில்வா

ராஜித சேனாரத்ன சிரேஷ்ட உப தவிசாளராகவும், வடிவேல் சுரேஷ் பிரதி செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். உமா சந்திரா பிரகாசுக்கும் பிரதி செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டனர்.

Related Articles

Latest Articles