ஐதேகவை மீள கட்யெழுப்பினால் வெற்றி நிச்சயம்!

ஐ.தே.க.வை மீளக் கட்டியெழுப்பினால் நிச்சயம் வெற்றி பெற முடியும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அத்துகோரள தெரிவித்தார்.

கொழும்பு – பிளவர் வீதியில் தொகுதி அமைப்பாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஐக்கிய தேசிய கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி இணைவு குறித்து 2020 செப்டெம்பர் மாதத்திலிருந்தே நாம் கலந்துரையாடியிருக்கின்றோம்.

அப்போது நான் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினராக கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து இந்த கோரிக்கையை முன்வைத்திருந்தேன். பின்னர் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் கபீர் ஹசீம் ஆகியோரை அழைத்து வந்து கலந்துரையாடியிருக்கின்றேன்.

இன்று இவ்விரு கட்சிகளுக்கும் ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் அன்றே நாம் உணர்ந்தோம். இந்த அபாயத்தை உணர்ந்ததன் காரணமாகவே இணைந்து பயணிக்க வேண்டும் என்பதை ஆரம்பத்திலிருந்தே வலியுறுத்தினோம்.

அன்று ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெற்றிருந்ததால் தான் நாம் இவ்வாறான கோரிக்கையை முன்வைப்பதாக பெரும்பாலானோர் குறிப்பிட்டனர். ஆனால் இன்று என்னவாகியிருக்கிறது?

கட்சிகள் இரண்டாக இருந்தாலும் ஐக்கிய தேசிய கட்சியினரே இரு தரப்பிலும் இருக்கின்றனர். இதற்காக நானும் பிரதி தலைவரும் அர்ப்பணிப்புடன் முயற்சித்து வருகின்றோம்.

அதற்கமைய பேச்சுவார்த்தைகளையும் ஆரம்பித்திருக்கின்றோம். எவ்வாறிருப்பினும் எம்மால் இதனை தனித்து செய்ய முடியாது. கீழ் மட்டத்திலிருந்து சகலரும் இதற்கு ஒத்துழைக்க வேண்டும்.

யானை சின்னத்தில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் ஜீவன் தொண்டமான் வெற்றி பெற்றிருக்கின்றார். அவராகவே கோரிக்கையை முன்வைத்து யானை சின்னத்தில் போட்டியிட்டார். எனவே இதனை மீளக் கட்டியெழுப்பினால் நிச்சயம் எம்மால் வெற்றி பெற முடியும். இது யதார்த்தமாகும். ஐ.தே.க.வின் பிளவில் நானும் தவறிழைத்தவளாகவே உணர்கின்றேன். அன்று அனைவரும் இணைந்து எடுத்த தீர்மானத்துக்கு நாம் இணக்கம் தெரிவித்தோம்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles