ஐயப்ப பக்தர்களுக்கு அறவிடப்படும் காப்புறுதி கட்டணத்தை குறைக்க நடவடிக்கை!

இலங்கையில் இருந்து  சபரிமலை யாத்திரை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு அறவிடப்படும் 4 ஆயிரம் ரூபா காப்புறுதி நிதியை 1000 ரூபாவாக குறைத்து அறவிடுவதற்கான பேச்சுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கு விரைவில் சாதகமான முடிவுகள் கிடைக்கவுள்ளதாகவும் ஐக்கிய தேசிய கட்சியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.

சபரிமலை யாத்திரை செல்லும் ஐயப்ப பக்தர்கள் இந்த விடயம் தொடர்பில் எஸ்.ஆனந்தகுமாரின் கவனத்துக்கு கொண்டுவந்ததை தொடர்ந்து இதனை ஐ.தே.கவின் சிரேஷ்ட உறுப்பினர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் யோகராஜனின் கணத்துக்கு கொண்டுசென்ற  எஸ்.ஆனந்தகுமார், அவர் தலைமையில் பலகட்ட பேச்சு களை நடத்தினர்.

இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட எஸ்.ஆனந்தகுமார்,

இம்மாத இறுதியில் சபரிமலை யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு விசா கட்டணத்துக்கு மேலதிகமாக 4000 ரூபா காப்புறுதி நிதியும் செலுத்த வேண்டிய சூழ்நிலை காணப்படுகிறது. இந்த நிதியை குறைந்தளவில் (1000 ரூபா) அறவிட வேண்டுமென வெளிவிவகார அமைச்சர் அலி சபரி, இந்திய உதவி உயர்ஸ்தானிகர், பௌத்த கலாசார திணைகளதின் செயலாளர் உட்பட உரிய தரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

பேச்சுவார்த்தைகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கப்பெற்றுள்ளதால் விரைவில் இதுதொடர்பிலான அறிவிப்பு வெளியாகும். இதேவேளை, வீசா சலுகைகளை வழங்குவது தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகராலயத்துடனும் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேட்டுத்தெரு  ஸ்ரீராஐ ராஐராஐேஸ்வரி ஆலயத்தின் தலைவர் திருக்கேஷ்  செல்லசாமி, ரவீந்திரன் குருசாமி, ரவீந்திர குமார் குருசாமி உள்ளிட்டவர்களும் இந்து கலாசார திணைக்களத்தின் அதிகாரிகளும் இந்த பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்டுள்ளனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles