ஐக்கிய தேசியக் கட்சி எழுந்துவிட்டது, அக்கட்சியின் பலம் என்னவென்பது அடுத்த தேர்தலில் தெரியவரும் -என்று ஐதேகவின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையவுள்ளனர். மே தினத்தில் அவர்கள் மேடையேறுவார்கள் என நாம் கூறவில்லை. அடுத்துவரும் நாட்களில்தான் அவர்கள் வருவார்கள். இனிதான் அரசியல் ஆட்டம் சூடுபிடிக்கும்.
விழுந்துவிட்டது எனக் கூறப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சி எழுந்துவிட்டது. எமது பலம் என்னவென்பது அடுத்துவரும் நாட்களிலும் ஜனாதிபதி தேர்தலிலும் தெரியவரும்.
சஜித் பிரேமதாச ஜனாதிபதி தேர்தலுக்கு வருவார் என நம்பவில்லை. ஐதேகவில் தலைமைத்துவ பிரச்சினை ஏற்பட்டபோதுகூட கருஜயசூரியவை பலிகடாவாக்கிவிட்டு அவர் தப்பித்தார்.” – என்றார்.
