‘ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரை இலங்கைக்கு அழைக்க வேண்டும்’

இலங்கைக்கு கண்காணிப்பு பயணமொன்றை மேற்கொள்ளுமாறு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையார் மிச்செல் பசெலெட் அம்மையாருக்கு அரசு அழைப்பு விடுக்க வேண்டும் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினரும், அனைத்துலக அரசியல் விமர்சகருமான கலாநிதி கலாநிதி பிரதீபா மஹாநாம ஹோவா தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” இலங்கைக்கு 2014 ஆம் ஆண்டிலும் இதேபோன்றதொரு நிலைதான் ஏற்பட்டிருந்தது. அப்போது மனித உரிமைகள் ஆணையாளராக இருந்த பேராசிரியர் நவநீதம் பிள்ளை அம்மையாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதனை ஏற்று அவர் நாட்டுக்கு வந்தார். அனைத்து பகுதிகளுக்கும் பயணம் மேற்கொண்டார். குறைகளையும் பட்டியலிட்டுக்காட்டினார். ஆனாலும் அவர் யதார்த்தத்தை புரிந்துகொண்டார். இளைஞர் நாடாளுமன்றம் குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

இலங்கை வருவதற்கு முன்னர் அந்நாடு தொடர்பில் இருந்த மனநிலை விஜயத்தின் பின்னர் மாறியதாக நவநீதம் பிள்ளை அம்மையார் குறிப்பிட்டிருந்தார். யாழ். பயணத்தின்போது மொழி உரிமைக்கு வழங்கப்பட்ட முக்கியத்துவத்தை உணர்ந்தார்.

எனவே, இலங்கை வருமாறு தற்போதைய மனித உரிமைகள் ஆணையாளருக்கும் அழைப்பு விடுக்கவேண்டும். அதனை பிற நாடுகள் சாதகமான விடயமாக பார்க்கக்கூடும். அறிக்கைகளை மட்டும் அடிப்படையாகக்கொண்டே இலங்கை தொடர்பில் அவர் விம்பமொன்றை உருவாக்கி வைத்திருப்பார். ஆகவே, இலங்கைக்கு நேரில் வந்து, பல தரப்புகளுடன் கலந்துரையாடி நிலைமையை கண்காணித்தால் அவரால் யதார்த்த நிலைமையை புரிந்துகொள்ள முடியும். தவறான விம்பமும் உடையக்கூடும்.

அறிக்கையாளர்கள் வருவதைக்காட்டிலும் மனித உரிமைகள் ஆணையாளர் நேரில் வந்தால்தான், இலங்கை என்ன செய்துள்ளது, எவ்வாறான மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன என்பதனை நேரில் அவதானிக்க முடியும்.” – என்றார்.

Related Articles

Latest Articles