ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளருக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் திகதி எழுதிய கடிதத்தை எந்தவிதமான பின்வாங்க லும் இல்லாமல் மிக இறுக்கமாக அனை வராலும் கடைப்பிடிப்பதற்குரிய அணுகு முறையை உறுதிப்படுத்துவதற்கு விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
எதிர்வரும் சனிக்கிழமை மற்றும் ஞாயிறு தினங்களில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், மனித உரி மைகள் அமைப்புகளின் பிரதிநிதிகளை ஓரிடத்தில் சந் தித்துப் பேசவுள்ளோம் என்று தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவரும் நாடா ளுமன்ற உறுப்பினருமான கஜேந்திர குமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
அவரின் கட்சியின் தலைமைப் பணி மனையில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
“ ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் கடந்த வாரம் இலங்கைக்கு வருகை தந்த போது தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் சிவில் சமூகத் தலைவர்கள், செயற்பாட்டா ளர்களின் ஒப்புதலோடு ஒரு கடிதத்தை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையா ளரிடம் கையளித்தோம்.
அந்தக் கடிதத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலை வரும் கையொப்பமிட்டனர்.
அந்தக் கடிதம் வழங்கி அடுத்த வாரமே இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலை வரும், பொதுச்செயலாளரும் செம்மணி விவகாரத்தில் இலங்கை அரசிடம் அந்த விசாரணை நடத்துவதற்குரிய அங்கீகாரத் தைக் கூறி அதற்கு மேலதிகமாக ஒரு சில சர்வதேச தரப்புகளின் கண்காணிப்போடு செய்வதற்குரிய ஆலோசனைகளையும் வழங்கி இருக்கின்றார்கள்.
இது நேருக்கு நேர் முரண்பட்ட நிலைப்பாடு.
செம்மணி யில் நடந்தது அநியாயம். இலங்கை அரசு இதனை மூடி மறைக்க முயற்சித்த நிலையில் எதேர்ச்சியாக தற்போது வெளிவந்திருக்கின்ற ஆதாரங்களை மூடி மறைக்கின்ற சந்தர்ப்பங்களை நீங்கள் வழங்குகிறீர்கள் என்பதாகவே இந்தக் கடிதத்தைப் பார்க்க வேண்டியுள்ளது.” – எனவும் கஜேந்திரகுமார் எம்.பி. குறிப்பிட்டுள்ளார்.
இப்படிப்பட்ட தவறுகள் நடக்கக்கூடாது என்பதற்காக எதிர்வரும் வாரத்தின் இறுதியில் மேற்படி சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.” – எனவும் அவர் குறிப்பிட்டார்.
