” அமைச்சரவை மறுசீரமைப்பு இடம்பெற வேண்டும் என்பதே ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் யோசனையாக உள்ளது.” – என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார்.
சஜித் பிரேமதாச அல்ல ஐக்கிய மக்கள் சக்தியின் அனைத்து எம்.பிக்களும் அரசு பக்கம்வந்தால்கூட தமது கட்சிக்கு பிரச்சினை கிடையாது எனவும் அவர் கூறினார்.
அத்துடன், அமைச்சரவை மறுசீரமைப்பின்போது தமது கட்சிக்கு அநீதி இழைக்காத வகையில் ஜனாதிபதி செயற்படுவார் என நம்புவதாகவும் எஸ்.எம். சந்திரசேன குறிப்பிட்டார்.
