ஒரே நாளில் 268 பேருக்கு ஒமிக்ரோன்

உருமாறிய கொரோனா தொற்றாக கருதப்படும் ஒமைக்ரான் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. நேற்றிரவு நிலவரப்படி மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 108 பேரும் புதுடெல்லியில் 79, குஜராத்தில் 43, தெலுங்கானாவில் 38 பேரும் ஒமைக்ரான் பாதிப்பு பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலத்தில் ஒமைக்ரான் பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்தது.

இந்நிலையில் இன்று காலை 9 மணி நேர நிலவரப்படி ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 422 ஆக உயர்ந்துள்ளது.

தமிழ்நாடு உள்பட 17 மாநிலங்களில் ஒமைக்ரான் வைரஸ் பரவியுள்ளது. இதுவரை 130 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை நிலவரப்படி மேலும் 6,987 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 7,091 பேர் சிகிச்சைக்கு பின் மீண்டுள்ளனர்.

நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பால் 162 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் 76,766 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles