கஜேந்திரகுமார் எம்.பிக்கு நடந்தது என்ன? அறிக்கை கோருகிறார் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கும், பொலிஸ் அதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிலான் அலஸ், விசாரணை அறிக்கையொன்றை கோரியுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்துக்கு நாளை தெளிவுப்படுத்தப்படும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேற்று முன்தினம் மாலை மருதங்கேணியில் தாக்கப்பட்டுள்ளார். அவரை அடித்ததாகக் கூறப்படும் அரச புலனாய்வாளர் தப்பிச் சென்று தலைமறைவாகினார்.

இதனையடுத்து பொலிஸ் அதிகாரி ஒருவருக்கும், கஜேந்திரகுமார் எம்.பிக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles