கஜேந்திரன் மீது தாக்குதல் – அமைச்சர் டிரான் அலசிடம் மனோ விடுத்துள்ள கோரிக்கை

” நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் மீது திருகோணமலையில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தையும், நாடாளுமன்ற உதிக பிரேமரத்ன மீதான அனுராதபுர துப்பாக்கி சூட்டு சம்பவத்தையும் ஒரே மாதிரியான சட்டம், ஒழுங்கு பிரச்சினையாக கருதி, விசாரித்து, குற்றவாளிகளை கைது செய்யுங்கள்.”

இவ்வாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலசிடம் கோரிக்கை விடுத்துள்ளார் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன்.

” எனது கோரிக்கையை ஏற்றதாக அமைச்சர் உறுதியளித்தார். இதுபற்றி தற்சமயம் சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தனவுக்கும் தொலைபேசியில் நான் தொடர்புற்று அறிவித்தேன்.” எனவும் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles