கஞ்சா சகிதம் கண்டியில் மூன்று பாடசாலை மாணவர்கள் கைது!

கண்டியில் பிரதான மூன்று பாடசாலைகளில் உயர்தர வகுப்பில் கல்வி பயிலும் மூன்று மாணவர்கள், கஞ்சாவுடன் கண்டி பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த மாணவர்கள் தனியார் வகுப்புகளுக்கு செல்வதற்காக வந்து ஜோர்ஜ் ஈ டி சில்வா பூங்காவில் நடமாடிக் கொண்டிருந்தபோது பொலிஸார் மேற்கொண்ட திடீர் சோதனையில் அவர்களிடமிருந்து 3000 மிலிகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது.

தனியார் வகுப்புகளுக்கு செல்வதாக கூறி பெற்றோரிடம் வகுப்புக் கட்டணத்தை பெற்று போதை வஸ்துக்களை வாங்கும் இம்மாணவர்கள் அதை பாவித்துவிட்டு கண்டி நகரில் சுற்றித் திரிவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து பொலிசார் இந்த சுற்றி வளைப்பை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles