ஆபத்து ஏற்படக்கூடிய மற்றும் வார இறுதி கடமைகளில் இருந்து விலகியிருக்க இலங்கை மின்சார சபை தொழில்நுட்ப பொறியிலாளர் மற்றும் அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.
இலங்கை மின்சார சபை தொழில்நுட்ப பொறியிலாளர் மற்றும் அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் ஏ.ஜீ.யு நிஷாந்த இதனைத் தெரிவித்துள்ளார்.
மோசமான நிதி நிலைமையின் அடிப்படையில் அத்தியாவசிய கடமைகளை மேற்கொள்ளுமாறு நிர்வாகத்தினால் பிரயோகிக்கப்படும் அழுத்ததிற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
