கடல் உணவுகளின் விலைகள் அதிகரிப்பு

பேலியகொடை மீன் மொத்த விற்பனைச் சந்தையில் கடல் உணவுகளின் விலைகள் அதிகரித்துள்ளன.

இன்று (18) ஒரு கிலோகிராம் கெளவல்லோவின் விலை 1800 ரூபாவாக அதிகரித்துள்ளது.

ஒரு கிலோ தலபத்தின் விலை 1700 ரூபாவாகவும், ஒரு கிலோ லின்னா 600 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றன.

சாலை மீன் ஒரு கிலோகிராம் 600 முதல் 700 ரூபா வரையிலும், கீரி மீன் கிலோ 1000 முதல் 1100 ரூபா வரையிலும், பலயா கிலோ 1000 ரூபா வரையிலும் விற்பனை செய்யப்படுகின்றன.

ஒரு கிலோ இறால் 1100 ரூபாவுக்கும், கணவாய் 800 முதல் 900 ரூபாவுக்கும் விற்கப்படுகின்றன.

Related Articles

Latest Articles