கட்டுப்பணம் செலுத்தினார் விஜயதாச ராஜபக்ச!

செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தேசிய ஜனநாயக முன்னணி சார்பில் களமிறங்குவதற்கான கட்டுப்பணத்தை விஜயதாஸ ராஜபக்ஸ இன்று செலுத்தினார்.

ராஜகிரிய பகுதியிலுள்ள தேர்தல் ஆணைக்குழுவில் இந்த கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் இதுவரை 07 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மைத்திரி அணி, விஜயதாச ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கியுள்ளது.

Related Articles

Latest Articles