கட்டுமானத்துறை எதிர்நோக்கும் சவால்கள் குறித்து ஆராய்வு!

தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலையில் கட்டுமானத் துறை எதிர்நோக்கும் சிக்கல்கள் குறித்து பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பிலான குறுகிய கால மற்றும் நடுத்தர கால நிகழ்ச்சித்திட்டங்களை அடையாளம் காணல் பற்றிய தேசிய பேரவையின் உப குழுவில் கலந்துரையாடப்பட்டது.

பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பிலான குறுகிய கால மற்றும் நடுத்தர கால நிகழ்ச்சித்திட்டங்களை அடையாளம் காணல் பற்றிய தேசிய பேரவையின் உப குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையில் பாராளுமன்றத்தில் கூடிய போதே இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

நாட்டின் கட்டுமானத் துறையுடன் சம்பந்தப்பட்ட அரச மற்றும் தனியார் துறையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல தரப்பினர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டிருந்ததுடன் சம்பந்தப்பட்ட துறையினர் முகங்கொடுக்கும் சிக்கல்கள் தொடர்பில் கருத்துக்கள் பெற்றுக்கொள்ளப்பட்டன.

கட்டுமானத் துறையில் நேரடியாகப் பணிபுரியும் சுமார் 650,000 ஊழியர்களும், மறைமுகமாகப் பணிபுரியும் சுமார் 700,000 ஊழியர்களும் உள்ளதாக இதன்போது கலந்து கொண்ட பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர். எனினும் தற்பொழுது கட்டுமானத் துறை வீழ்ச்சியடைந்துள்ளதன் காரணமாக இந்தப் பணியாளர்கள் நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

அதேபோன்று, தற்பொழுது நிர்மாணிக்கப்பட்டுள்ள மாடி வீடுகள் மற்றும் அலுவலகம் போன்ற கட்டுமானங்களை விற்பனை செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் இவர்கள் சுட்டிக்காட்டினர்.

மேலும், தற்பொழுது நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டுமானங்களின் ஒரு பகுதிக்கு அரசாங்கத்தினால் கட்டணம் செலுத்தாததனால் வங்கிக் கடன்களை மீள செலுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ள பலர் உள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
அதேபோன்று, பொருளாதார நெருக்கடி காரணமாகக் காட்டுமானத் துறையிலுள்ளவர்கள் நாட்டை விட்டு வெளியேறும் நிலைமை ஏற்பட்டுள்ளமை இங்கு புலப்பட்டது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles