” ஆகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் கண்டி மாவட்டத்தில் வாழும் தமிழ் பேசும் மக்கள் ஓரணியில் திரண்டு ஐக்கிய மக்கள் சக்திக்கே தமது ஆதரவை வழங்குவார்கள். அதிலும் குறிப்பாக கண்டி மாவட்டத்துக்கு தமிழ்ப் பிரதிநிதித்துவம் அவசியம் என்பதிலும் அவர்கள் உறுதியாக இருக்கின்றனர். எனவே, எனது வெற்றியை வரலாற்று வெற்றியாக மாற்றியமைக்க மக்கள் ஒன்றுபட்டுவிட்டனர்.” – என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட வேட்பாளருமான வேலுகுமார் தெரிவித்தார்.
ஜனநாயக மக்கள் முன்னணியின் கண்டி மாவட்ட செயற்பாட்டாளர்களுடன் நடைபெற்ற விசேட கலந்துரையாடலிலேயே இவர் இதனை குறிப்பிட்டார். இது தொடர்பில் மேலும் கூறியதாவது,
” கண்டி மாவட்டத்தில் எமக்கு கடந்த நான்கரை வருடங்களில் தளம்பலற்ற செல்வாக்குநிலை தொடர்ந்தது.கடந்த ஜனாதிபதி தேர்தலின்போதுகூட இதனை நிரூபித்தோம். கண்டி மாவட்டத்தி
அத்தொகுதிகளில்தான் தமிழ் மக்களே அதிகம் வாழ்கின்றனர். எனவே, வெற்றிக்கான களத்தை முற்போக்கு கூட்டணியே எமது செயற்பாடுகள் ஊடாக அமைத்துக்கொடுத்தது. எமது செல்வாக்கு எப்படியுள்ளது என்பது இதன்மூலம் உறுதியாகின்றது.
அதுமட்டுமல்ல கடந்த உள்ளாட்சிமன்றத்தேர்தலில் தனித்துபோட்டியிட்டு 23 ஆயிரம் வாக்குகளைப்பெற்றோம். எமக்கென இன்று 11 உள்ளாட்சிமன்ற உறுப்பினர்களும் இருக்கின்றனர். எனவே, இத்தேர்தலிலும் எமக்கான மக்கள் செல்வாக்கு தொடரும் என்பது உறுதி. வெற்றியை வரலாற்று வெற்றியாக மாற்றியமைக்க அமைப்பாளர்கள் தீவிரமாக செயற்படவேண்டும்” -என்றார்.
