கண்டியில் மலரவுள்ள புதிய அரசியல் கட்சியின் விசேட கூட்டமொன்று அடுத்த மாதம் முதல் வாரத்தில் கம்பளையில் இடம்பெறவுள்ளது.
கட்சி கட்டமைப்பு, பதவிநிலைகள், யாப்பை இறுதிப்படுத்தல், அமைப்பாளர்கள் நியமனம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்காகவே இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புதிய கட்சியின் மத்திய செயற்குழுவில் இடம்பெறவுள்ளவர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.
கண்டி மாவட்டத்தை மையப்படுத்தி இயங்கவுள்ள இக்கட்சியின் பின்னணீயல் பிரபல தமிழ் வர்த்தகர் ஒருவரே செயற்படுவதாகவும், முக்கியமான சிவில் அமைப்புகள் இக்கட்சியுடன் இணைந்து செயற்படவுள்ளன எனவும் தெரியவருகின்றது.
கடந்த பொதுத்தேர்தலில் கண்டி மாவட்டத்தில் சுயேட்சையாக போட்டியிட்ட சில வேட்பாளர்களும் இக்கட்சியில் இணைந்து பயணிக்க தமது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
கண்டி மாவட்டத்தை பிரதான தளமாக இயங்குவதற்கு திட்டமிட்டுள்ள அக்கட்சி, மாத்தளையிலும் தமது அரசியல் பணிகளை முன்னெடுக்கும் என முக்கிய பிரமுகர் ஒருவர் தெரிவித்தார்.
