கண்டி பெரஹரவுக்கு போதைப்பொருளுடன் வந்த 21 பேர் கைது!

கண்டி எசல பெரஹரவை காண, ஹெரோயின் உள்ளிட்ட போதை பொருட்களுடன் வருகைதந்த 21 பேர், கண்டி ஊழல் ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் குழுவால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து கேரள கஞ்சா உட்பட சில வகையான போதைப் பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைதானவர்கள், கொழும்பு, கண்டி, கட்டுகஸ்தோட்டை, பேராதனை மற்றும் மாத்தளை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Articles

Latest Articles