கண் நோய் பரவல்; சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தல்

இந்நாட்களில் கண் நோய்கள் அதிகளவில் பரவி வருவதாக கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையின் விசேட கண் சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியர் கபில பந்துதிலக்க தெரிவித்துள்ளார்.

கண் நோய்களில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறு மக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

கண்கள் சிவத்தல், இமைகள் வீங்குதல் ஆகியன இந்த நோய்களுக்கான அறிகுறிகளாகும்.

குழந்தைகள் மத்தியில் அதிகமாக பரவி வரும் இந்நோய் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் தொடுகை மூலமே இந்த நோய் பரவக்கூடிய அபாயம் அதிகமாக உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles