கந்தப்பளையில் காட்டெருமை தாக்கி வயோதிபர் படுகாயம்

கந்தப்பளை – ஹைபொரஸ்ட் இலக்கம் மூன்று நகரில் காட்டெருமை தாக்கி 84 வயதான வயோதிபர் படுகாயம் அடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹைபொரஸ்ட் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு காட்டெருமை தாக்குதலுக்கு இலக்கானவர் ஹைபொரஸ் இலக்கம் மூன்று தோட்டத்தை சேர்ந்த முனியன் கங்காணி என்பவராவார்.

ஹைபொரஸ்ட் மூன்றாம் பிரிவில் நேற்று முன்தினம் பகல் பிங்கந்தலாவை பகுதியிலிருந்து காட்டெருமை ஒன்று நகருக்கு திடீரென வந்துள்ளது.

அந்த காட்டொருமையை விரட்டியடிக்க நகரில் சிலர் முற்பட்டுள்ளனர். இதன்போது குறித்த வயோதிபர் காட்டெருமையின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

குறிப்பாக கந்தப்பளை ஹைபொரஸ்ட் வனப்பகுதியில் காட்டெருமை, காட்டுபன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகமாக வசித்து வருகின்றன. இவை அடிக்கடி உணவு மற்றும் தண்ணீர் தேடி பிரதான நகர் பகுதிக்கு பகுதிகளுக்குள் புகுந்து விடுகின்றன. இந்த காட்டெருமை கூட்டம் நகர்பகுதியில் உலா வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

நானுஓயா நிருபர், லிந்துலை நிருபர் கௌசல்யா

Related Articles

Latest Articles