கந்தப்பளை வீட்டுத் திட்டத்தில் சர்ச்சை!

கந்தப்பளை-கோனக்கலை தோட்டப்பிரிவில் இலக்கம் (06) தேயிலை மலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 42 தனி வீடுகளுக்கு உட்கட்டமைப்பு வசதிகள் ஒழுங்காக அமைத்துக் கொடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது,

இங்கு நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய வீடுகளுக்கு நீர் ,மின்சாரம் மற்றும் போக்குவரத்து வசதிகள் எதுவும் ஒழுங்காக அமைத்துக் கொடுக்கப்படவில்லை. அத்தோடு இந்த வீட்டு திட்டமானது, வீடு வசதி அற்றவர்களுக்காக கட்டப்படுவதாக தெரிவித்தே நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தற்போது வீடுள்ள சிலருக்கும் வீடுகள் வழங்கப்பட்டுள்ளதாக தோட்ட மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் இந்த வீட்டு திட்டத்தில் உள்ள வீடுகளில் ஒரு வீட்டை தவிர ஏனைய வீடுகள் அனைத்தும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் அங்கத்தவர்களுக்கே வழங்கப்பட்டுள்ளதாக ஆதாரத்துடன் தெரிவித்துள்ளனர்.எனவே இது குறித்து அரசாங்கம் மற்றும் பெருந்தோட்ட வீடமைப்பு அமைச்சு மறுபரிசீலனை செய்து உண்மையில் வீடு வசதியின்றி வாழ்வோரை இனங்கண்டு வீடுகளை வழங்க தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென தோட்ட மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Articles

Latest Articles